பளை பிரதேச செயலகத்தில் 2 நாள்களில் அடுத்தடுத்து மூன்று உத்தியோகத்தர்கள் மரணம்! (Photos)

பளை – பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தில் பணியாற்றிய மூன்று உத்தியோகத்தர் இரு நாள்களில் அடுத்தடுத்து மரணமடைந்துள்ளமையால் அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர்கள் பெரும் கவலையடைந்துள்ளனர். பிரதேச மக்களும் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

பிரதேச செயலகத்தில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணியாற்றிய விசாகரத்தினவேல் சுகன்ஜா கடந்த 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை டெங்கு நோய் காரணமாக உயிரிழந்தார்.

நிர்வாகக் கிளையில் முகாமைத்துவ உத்தியோகத்தராகக் கடமையாற்றிய இரவிச்சந்திரன் ரிதுஷன் கடந்த 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அகால மரணமடைந்தார்.

திட்டமிடல் கிளையில் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றிய நடராஜா பிறேமவாசன் கடந்த 20 ஆம் திகதி விபத்தில் படுகாயமடைந்திருந்த நிலையில், 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

இரண்டு நாள்களில் மூன்று உத்தியோகத்தர்களை இழந்தமையால் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆறாத மனக் கவலைகளுடன் பணியாற்றி வருகின்றனர்.

குறித்த பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றும் நடராஜா பிறேமவாசன் (வயது -45) என்பவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார்.

 

 

 

 

அதே பிரதேச செயலகத்தில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றிய விசாகரனத்தினவேல் சுகன்யா கடந்த 22 ஆம் திகதி டெங்கு நோய் காரணமாக உயிரிழந்தார்.

 

 

 

 

பளை பிரதேச செயலகத்தில் நிர்வாகக் கிளையில் முகாமைத்துவ உதவியாளராகக் கடமையாற்றிய ரவிச்சந்திரன் ரிதுஷன் முரசுமோட்டையில் உள்ள தனது இல்லத்தில் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *