முல்லைத்தீவில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் கனமழை பெய்து வருகின்ற நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நேற்று நள்ளிரவு தொடக்கம் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதுடன், இதன்காரணமாக தாழ் நில பிரதேசங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளதாக தெரியவருகிறது.

இரு வாரங்களுக்கு முன் முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுபோன்று கனமழை பெய்தமையால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்திருந்தனர்.

இதன் பின்னர் ஓய்திருந்த மழையுடனான வானிலை மீண்டும் ஆரம்பித்துள்ளது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *