சஜீவன் ஏமாற்றியவர்களின் பட்டியல் நீண்டு கொண்டு செல்கின்றது!! இதோ மற்றைய சம்பவம்!!

தமிழ்த்தேசியத்தின் பெயரில் மிகக் கேவலமான செயற்பாடுகளை கூட்டமைப்பு உறுப்பினர்கள் செய்து கொண்டிருப்பது படிப்படியான வெளியே வந்து கொண்டுள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அபலைகளிமே ஏமாற்றிக் கொள்ளையடிப்பது என்பது இறந்த பிணத்துடன் உறவு கொள்வதற்கு சமமாகும்.  இதோ மற்றைய ஏமாற்று வேலையை மிகக் கச்சிதாமாக செய்து முடித்துள்ளான் சஜீவன்

சுவிசில் வசிக்கும் ஜெகதீஸ்வரன் யாழவன் என்னும் இளைஞனின் தந்தை அவனது 11வயதில் முள்ளிவாய்கால் இறுதி யுத்தத்தில் காணமல் போன நிலையில் குடும்ப நிலை காரணமாக 2015 ம் சுவிஸ் நாட்டில் குடியோறியுள்ளார்.தாய் தற்பொழுது முல்லைத்தீவு முள்ளிவளை என்னும் இடத்தில் வசித்து வருகிறார்.

மேலும் சுவிசில் குடியேறிய இளைஞனுக்கு அந்தாட்டின் நிரந்தர விதிவிடம் வழங்குவதற்கான வழக்கு அந்நாட்டு நீதிமன்றம் நடைபெற்ற நிலையில் குறித்த இளைஞனுக்கு தன்னுடைய தந்தை காணமால் போனதை உறுதிப்படுத்த பொதுஅமைப்புகளின் கடிதம் தேவைப்பட்டுள்ளது.இக்கடிதத்தை பெற்றுத் தரும்படி போஸ்கோ என்ற மரியதாஸ் மோகனராஜ்யை அறிமுகம் செய்துள்ளார்

சஜீவன் சண்முகலிங்கம் முல்லைதீவில் உள்ள பிரஜைகள் உரிமைகளுக்கான அமையம் என்ற பொது அமைப்பின் letter head போல ஒன்றை போலியாக உருவாக்கி கடித்த்தை போலியாக தயாரித்து குறித்த இளைஞனுக்கு viber மூலம் அனுப்பி ரூபா 30,000/=கேட்டுள்ளான்.

No photo description available.

கடிதத்தின் உண்மை தன்மையை அறியாத இளைஞன் தனது உறவினரான சுஜிவன் என்பவரிடம் மேலே குறிப்பிட்ட தொகையை சஜீவன் சண்முகலிங்கத்தின் Boc கணக்கு இலக்கமாகிய 70301444 என்ற கணக்கு இலக்கத்திற்கு வைப்பிலிடுமாறும் வைப்பிட்டபின் கடிதத்தை பெற்று தனக்கு அனுப்புமாறும் கோரிக்கை விடுத்தது உள்ளான்.

குறித்த தொகையை வைப்பிலிட்டு கடிதத்தை பெற்று கொண்ட சுஜிவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. குறித்த கடிதம் போலி என்பதை கண்டறிந்த சுஜிவன் letter head ல் குறிப்பிட்ட கையடக்க தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்திய பொழுது அவ்விலக்கமானது இரத்தினம் சுபத்திரா என்பவருடையது கண்டறியப்பட்டது.

மேலும் பிரஜைகள் உரிமைகளுக்கான அமையத்தின் தலைவர் மரியதாஸ் அடிகளாரிடம் தொடர்பு கொண்ட பொழுது குறித்த கடிதத்தை தங்களது அமைப்பு வழங்கவில்லை என உறுதிப்படுத்தியுள்ளது.

No photo description available.

மேலும் சஜீவனின் மோசடிகள் தொடர்பில் பலரும் விசனம் தெரிவித்து வருகின்றனர் கூட்டமைப்பு உறுப்பினகள் போரின் கோரத்தண்டவத்தை அனுபவித்தவர்களை மேலும் துன்பத்தில் ஆழத்துவது வேலியே பயிரை மேய்வதற்கு ஒப்பானது

ஆதாரமாக:சஜீவனால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் இணைக்கப்பட்டுள்ளது அதில் சஜீவனின் தொலைபேசி இலக்கம் உள்ளது.
2_வங்கியில் வைப்பு செய்யப்பட்ட பற்று சீட்டு இணைக்கப்பட்டுள்ளது
3 பிரஜைகள் உரிமைகளுக்கான அமைத்தால் குறித்த கடிதம் போலி என்பதை உறிதிப்படுத்தும் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது.

No photo description available.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *