யாழ். வடமராட்சி கிழக்கில் பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்பு

யாழ். வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் நேற்று பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 140 கிலோ கிராம் நிறையுடைய கஞ்சா பொதியை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

கஞ்சா பொதி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

கடல்மார்க்கமாக கஞ்சா கொண்டு வரப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *