ஜனாதிபதி கோத்தபாயா மீது நம்பிக்கை வைத்த யாழ் மக்களுக்கு இணைப்பாளர் கூறும் தகவல் இது!!

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு, கிழக்கு வாழும் சிறுபான்மையினத்தினரான தமிழ், முஸ்லீம் மக்களை தவறான வழியில் கொண்டு சென்ற கூட்டமைப்பு மற்றும் முஸ்லீம் அடிப்படைவாதிகளால் ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாயாவுக்கான வாக்குகளில் குறித்த பிரதேசங்களில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தாலும் கூட கோத்தபாயாவை நம்பி வாக்களித்த மக்களின் நம்பிக்கையை வீண் போகச் செய்யாது தாம் கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவார் என இணைப்பாளர்களில் ஒருவரான ஆ.செல்வா அவர்கள் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கோத்தபாயாவுக்கு 25 ஆயிரத்துக்கு குறைந்த அளவான வாக்குகளே கிடைத்திருந்தாலும் அவருக்காக வாக்களித்த அந்த வாக்காளர்களின் நம்பிக்கையை வீண் போகச் செய்யாது அவர்கள் வைத்தே யாழ்ப்பாணத்தில் கோத்தபாயா சிறப்பான செயற்பாடுகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம். அவர் வடக்கு மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவார். கூட்டமைப்பின் போலி வேசத்தை இனிவரும் காலம் தமிழ் மக்கள் உணரும் செயற்பாடுகளை ஜனாதிபதி மேற்கொள்வார். தமிழர்கள் மீது அவர் வைத்திருக்கும் கரிசனைகளை இனிவரும் காலம் தமிழர்கள் புரிந்து கொள்ளும் வகையில் செயற்பாடுகளை ஜனாதிபதி ஆரம்பிப்பார். ஜனாதிபதியை நினைத்து எந்த தமிழர்களும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. போலி பரப்புரைகளை மேற்கொண்டதாலேயே தமிழர்கள் ஜனாதிபதி மீது அச்சம் கொண்டு அவருக்கு எதிராக வாக்களித்திருக்கின்றனர் என்பதை ஜனாதிபதி அறிவார். அதே வேளை ஜனாதிபதியின் பெயரைப் பயன்படுத்தி சமூகவிரோத செயல்களை செய்பவர்களும் யாழ்ப்பாணம் உட்பட தமிழர் பிரதேசங்களில் சமூகவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களையும் இனங்கண்டு அவர்களுக்கு எதிராக தக்க சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தயவுசெய்து ஜனாதிபதியின் பெயரைப் பயன்படுத்தி இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என மிகவும் தாழ்மையுடன் கேட்டுகொள்வதாக எமக்குத் தெரிவித்தார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *