செய்வோம் செய்விப்போம்… டக்ளஸ் தேவானந்தாவின் உள்ளத்தில் உதிர்த்த வைர வரிகள்

என்னை நம்புங்கள் செய்வேன் செய்விப்பேன்.. ஜனாதிபதி பதவிக்கு யார்வந்தாலும் நமக்கு ஒன்றுதான் ஏன் எனில் இரண்டுமே சிங்களவர்கள் தான் என்பது யாவரும் அறிந்த உண்மை.

எது எவ்வாறாகிலும் நாம் தெரிவு செய்துள்ள ஜனாதிபதி “கோத்தபாய ராஜபக்ச” ஏன் நாம் இவரை தெரிவு செய்தோம் என்பதற்கு பல காரணங்கள் உண்டு அவற்றில் சில…

தற்போதைய ஜனாதிபதி வேட்பாளரின் சகோதரன் “மஹிந்த ராஜபக்ச ” இவரை யாவரும் நன்கு அறிவீர்கள் அவரது ஆட்சிக்கலத்தில் நாம் அவருடன் இணைந்து பல்வேறு அபிவிருத்திகளை செய்தோம் .செய்வித்தோம் அவற்றில் சிலவற்றை கூறலாம் என நினைக்கின்றேன்.

  • 40,000 இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு
  • சுகாதார தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம்.
  • தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்.
  • சமுர்த்தி நியமனம்.
  • உவர்நீர் நன்னீர் திட்டம் கொண்டு வந்தமை.
  • சுமார் 34 ஆண்டு காலமாக இயங்காமல் இருந்த புகையிரத்தத்தை இயங்க வைத்தமை.
  • திக்கம் வடிசாலையை மீள உருவாக்கியமை.
  • அரச உத்தியோகத்தர்களுக்கு குறைந்த விலையில் வாகனம் (மோட்டார் சைக்கிள் )வழங்கியமை.
  • பல்லாயிரம் ஏக்கர் காணிகளை விடுவித்தமை.

இப்படியே அடுக்கிக்கொண்டு செல்ல முடியும் இவை அனைத்தையும் நாம் அன்றைய அரசாங்கத்துடன் இணைந்து நின்று செய்து முடித்தவைகளே

வரும் 16ம் திகதி வர இருக்கின்ற தேர்தலில் நாம் ஒன்றுபட்டு மொட்டு சின்னத்துக்கு வாக்களிப்போமேயானால் நிச்சயம் எம் அனைவராலும் நம்ப முடியாத ஒளிமயமான எதிர்காலத்தினை நாம்காண முடியும் என்பது நிச்சயம் .

” செய்வேன் செய்விப்பேன் ”

” சொல்வதையே செய்வேன் செய்வதையே சொல்லுவேன் ”

‘அனைவரும் மொட்டுச் சின்னத்துக்கு வாக்களிப்போம் வளமான எதிர்காலத்துக்கு வழிவகுப்போம்.

என்றும் தோழமையுடன் “டக்ளஸ் தேவானந்தா”

நான் எப்படி கோடீஸ்வரன் ஆனேன்?உண்மையை கூறும் சிறிதரன் எம். பி

Posted by NewJaffna on Khamis, 7 November 2019


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *