யாழ் பல்கலைக்கழகத்தில் முகாமிட்ட அரசியல் கட்சிகள்…!

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய பாதையில் பயணிக்கும் கட்சிகள் ஒருமித்த நிலைப்பாடு ஒன்றை எடுக்க கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்துள்ளமையும் ஆரோக்கியமான ஒன்றே என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில் மாணவர் ஒன்றியம் வெளியிட்ட அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளது.

அதில்,

தமிழ் மக்கள் நீண்ட காலமாக போராடிக் கொண்டிருப்பது தமக்கான நிரந்தரமான அரசியல் தீர்வொன்றினை பெற்றுக்கொளவ்தற்காகவே, என்றும், இதுவரையில் பலவழிகளிலும் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் நாம் இன்று பல தரப்புக்களாக எம்முள் பிளவுபட்டு நின்கின்றோம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் நாம் எமது பேரம்பேசும் பலத்தை இழந்துவிடும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக கூறிய மாணவர் ஒன்றியம், எமது பேரம்பேசும் பலத்தைப் உறுதிப்படுத்த நாம் ஒருமித்த முடிவினை எடுக்க வேண்டியது என்பது காலத்தின் கட்டாய தேவை எனவும் குறிப்பிட்டுள்ளது.

இத்தகைய சூழலினை தமிழ்தரப்புக்கள் அனைத்தும் உணர்ந்து கொண்டு பிளவுபட்டு நின்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றாக கூடி கலந்துரையாடியமை வரவேற்கத்தக்கது.

இதுபோன்ற ஆரோக்கியமாக கலந்துரையாடல்கள் இடம்பெற்று எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய பாதையில் பயணிக்கும் கட்சிகள் ஒருமித்த நிலைப்பாடு ஒன்றை எடுக்க கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்துள்ளமையும் மிகவும் ஆரோக்கியமான ஒன்று என்றும் கூறப்பட்டுள்ளது.

அதுமாத்திரமின்றி தமிழ் கட்சிகள் சார்பில் தலா இரண்டு பேர் கொண்டதாக குழு ஒன்றினை இன்றைய கலந்துரையாடலில் நியமித்துள்ளதாகவும் குறிப்பிட்ட மாணவர் ஒன்றியம், அதனடிப்படையில் தொடர்ந்து எதிவரும் திங்கட்கிழமை அன்று மீண்டும் கூடிகலந்துரையாடுவதாக தீர்மானிக்கபப்ட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுடன் நாம் நிபந்தனைகளை முன்வைத்து பேரம் பேசுவதோடு, அத்தகைய நிபந்தனைகளினை அடுத்த கலந்துரையாடலில் முடிவு செய்வது என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.

ஒருவேளை அத்தகைய பேரம்பேசல் வெற்றியளிக்காத பட்சத்தில் அடுத்த கட்டத்தில் நாம் எத்தகைய முடிவொன்றை எடுக்க வேண்டும் என்பதை தொடர்ந்தும் கலந்துரையாடுவது என்றும் இன்றைய கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டதாக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *