யாழில் பிரபல விடுதிக்கு செல்லும் மக்களே அவதானம்! ஏன் இப்படி ஒரு நிலை?

யாழில் உள்ள பிரபல விடுதிக்கு செல்லும் மக்கள் வழங்கு தேசிய அடையாள அட்டைப் பிரதிகளும் , கடவுச்சீட்டு பிரதிகளும் தெருவில் வீசி எறியபட்டுள்ள நிலையில் காணப்படுகின்றது.

யாழ் பலாலி வீதியில் உள்ள திருநெல்வேலி கொமர்சல் வங்கிக்கு முன்பாக குறித்த ஆவணங்கள் வீசப்பட்ட நிலையில் காணப்படுகின்றதாக பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் பொறுப்பற்ற விதத்தில் விடுதி நிர்வாகம் இவ்வாறு ஆவணங்களை வீதியில் வீசி விட்டு சென்றுள்ளதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் குறித்த ஆவணங்களை பயன்படுத்து சந்தர்ப்பத்தினையும் பொறுப்பில்லாத நிர்வாகம் உருவாக்கியுள்ளதாகவும் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனவே இனி வரும் நாட்களில் விடுதிக்கு செல்லும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் கூறப்படுகிறது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *