உயிர் வாழ்வதற்கான உரிமைக்காக முல்லைத்தீவில் போராட்டம்

உயிர் வாழ்வதற்கான உரிமை இலங்கை அரசியல் யாப்பில் சட்டமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று நண்பகல் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.

சிறுபான்மை மீதான தாக்குதலை நிறுத்துங்கள், நீதியை காப்பாற்றுங்கள், அனைத்து விதமான இனத்துவ பாரபட்சங்களை ஒழிப்போம் போன்ற பதாதைகளை தாங்கியவாறு சுமார் ஒரு மணிநேரம் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *