கிளிநொச்சியில் கடற்படையினரால் அகழ்வு பணிகள் முன்னெடுப்பு

கிளிநொச்சி – சிவபுரம் பகுதியில் கடற்படையினரால் இன்று அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

விடுதலை புலிகளினால் புதைக்கப்பட்டதாக கருதப்படும் முக்கிய ஆவணங்கள் மற்றும் பெறுமதியான பொருட்கள் என்பன அப்பகுதியில் காணப்படலாம் என கடற்படையினருக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதையடுத்து, கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் த.சரவணராஜா குறித்த பகுதியை பார்வையிட்டதை அடுத்து அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்போது கண்டாவளை பிரதேச செயலகத்தினர் மற்றும் கிராம சேவையாளர் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்

   


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *