அன்று ஆரவ்விற்கு கொடுத்த சீக்ரெட் டாஸ்க் இன்று யாருக்கு கொடுக்கப்பட்டது தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 1 டைட்டில் வின்னரான ஆரவ்விற்கு கொடுத்த டாஸ்க்கினை யாராலும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது. அவரது கை, கால்களை Wax செய்து முடிகளை அகற்றப்பட்டது.

அதே போன்ற டாஸ்கினை தற்போது தர்ஷனுக்கு கொடுத்துள்ளார் பிக்பாஸ். இதில் யாருடைய கை, கால்களை Wax செய்ய சொல்கின்றார் என்பது தெரியவில்லை.

ஆனால் கோல்டன் டிக்கெட்டிற்கான மதிப்பெண் தான் இந்த டாஸ்க் ஆகும் என்பது தெளிவாகவே தெரிகின்றது. இந்நிலையில் தர்ஷனுக்கு குறித்த போட்டியாளர் சம்மதம் தெரிவிப்பாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

ஆனால் குறித்த காணொளி ப்ரொமோ என்று வெளிவந்திருந்தாலும் இது இன்றைய மூன்றாவது ப்ரொமோ இல்லை. நேற்றைய தினத்தில் இதே போன்று கவின், லொஸ்லியா பிக்பாஸிடம் பேசிய காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. ஆக மொத்தம் இந்த காட்சி இன்றைய ப்ரொமோ இல்லையென்று தெளிவாக தெரிந்தாலும் இன்றைய நிகழ்ச்சியில் இந்த காட்சி வருகின்றதா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

குறித்த காட்சியில் தர்ஷன் அணிந்திருக்கும் ஆடையினைப் பார்த்தால் இது பொய்யான காணொளி என்று கூறப்பட்டு வருகின்றது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *