யாழில் பிரதமரால் திறந்துவைக்கப்பட்ட குணமாக்கல் நிலையம்- பல வாரங்களாகியும் பாவனைக்கு விடப்படவில்லை

அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , அங்கு பல இடங்களில் அடிக்கல் நாட்டியதுடன், பல கட்டடங்களையும் திறந்து வைத்தார்.

அந்தவகையில் அப்போது அவரால் திறக்கப்பட்ட கட்டடங்களில் ஒன்றுதான் , சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் குணமாக்கல் நிலையம்.

கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு பிரதமர் வந்து கட்டிட திறப்பு விழா முடிவுற்றபோது , அது இன்னும் பாவனைக்கு விடப்படவில்லை.

இதேவேளை,சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு நவீன நோயாளர் காவு வண்டியொன்றும் அண்மையில் வழங்கப்பட்டிருந்தது.

எனினும் அதுவும், பாவிக்கப்படாமல் பத்திரமாக, திறக்கப்படாத அவசர சிகிச்சை பிரிவு கட்டடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இருந்து, யாழ் போதனா வைத்தியசாலைக்கு அதிக நோயாளர் சேர்ந்த பின்னர், நோயாளர் காவு வண்டியில் நெருக்கடியாக ஏற்றிச் செல்வதாக விமர்சனங்கள் இருந்து வரும் நிலையில், புதிதாக வழங்கப்பட்ட நோயாளர் காவு வண்டியை இயக்காமல் நிறுத்தி வைத்துள்ளார்கள்.

இந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் திறக்கப்பட்ட குணமாக்கல் பிரிவு திறக்கப்படாதமைக்கு, உரிய தாதிய உத்தியோகத்தரின்மையே காரணமென வடக்கு சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *