கிளிநொச்சி சுற்றிவளைப்பில் கமரா, துப்பாக்கி ரவைகள் மீட்பு!

கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியில் இன்று அதிகாலை சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிளிநாச்சி பொலிசாரும், படையினரும் இணைந்து இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது பயன்பாட்டில் இல்லாத வீடு ஒன்றிலிருந்து கையடக்க தொலைபேசிகள், கமரா, துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட சில பொருட்கள் மீட்கப்பட்டன.

எனினும் குறித்த வீட்டில் தங்கியிருப்பவர் இரும்பு வியாபாரி என அப்பகுதி மக்கள் அடையாளம் காட்டினர். இரும்புடன் கலந்து வந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கமரா, தொலைபேசி ஆகியன அவர் பயன்படுத்தியது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வருகின்றது. எனினும் சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடதக்கதாகும்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *