கிளிநொச்சியில் சந்தேகத்திற்கிடமான வீட்டை சோதனை செய்த போது சிக்கிய பொருட்கள்!

கிளிநொச்சி தருமபுரம் காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட உழவனூர் பகுதியில் காவல்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து சந்தேகத்திற்கிடமான வீடொன்றை சோதனையிட்ட போது இராணுவச் சீருடை மற்றும் கைத் தொலைபேசிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

குறித்த வீட்டின் உரிமையாளர்; முஸ்லிம் என்பதோடு அவரது மனைவி குறித்த கிராமத்தைச் சேர்ந்த தமிழ் பெண்ணாவார் என ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இன்று(28-04-2019) பகல் குறித்த வீடு சோதனைக்குட்படுத்தப்பட்டபோது வீட்டில் இருந்து இராணுவச் சீருடையை ஒத்த ஆடைகள் மற்றும் கைத் தொலைபேசிகள் மீட்கப் பட்டுள்ளன. குறித்த வீட்டின் உரிமையாளர் தற்போது கொழும்பில் பணிபுரிகின்றார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இவ்வாறு மீட்கப்பட்ட பொருட்கள் தருமபுரம் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரனைகளை தருமபுரம் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *