கொழும்பில் இருந்து யாழ்.நோக்கி ஶ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்

கொழும்பில் இருந்து வவுனியா வரை வந்த வவுனியா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் புகையிரதம் நாளை முதல் காங்கேசந்துரை வரை “ஸ்ரீ தேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்”ஆக தனது சேவையை ஆரம்பிக்கவுள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து மாலை 3.55 மணிக்கு புறப்பட்டு யாழ்ப்பாணத்தை இரவு 10.00 மணி வந்தடைந்து காங்கேசந்துறைக்கு இரவு 10.16 க்கு செல்லவுள்ளது.

போல்கஹவேலா, குருநாகல், மஹோ, கல்கமுவா, தம்புத்தேகம, அனுராதபுரா புதிய நகரம், அனுராதபுரம், மதவாச்சியா,வவுனியா, அறிவியல் நகர், கிளிநோச்சி, கொடிகாமம், யாழ்ப்பாணம், காங்கேசந்துறை ஆகிய இடங்களில் புகையிரதம் நிறுத்தப்படும்.

காங்கேசந்துரையில் இருந்து காலை 3.45 க்கு புறப்பட்டு, யாழ்ப்பாணத்தை வந்தடைந்து யாழ்ப்பாணத்தில் இருந்து காலை 4.05 புறப்பட்டு கொழும்பு கோட்டைக்கு காலை 10.24 க்கு சென்றடையவுள்ளது.

காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், கொடிகாமம், கிளிநொச்சி, அறிவியல் நகர், வவுனியா, மதவாச்சியா, அனுராதபுரம் அனுராதபுரா புதிய நகரம், தம்புத்தேகம, கல்கமுவா, மஹோ,குருநாகல், போல்கஹவேலா, மருதானை, கோட்டை ஆகிய இடங்களில் நிறுத்தப்படவுள்ளது.

இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எஸ் 13 பவர் புகையிரதம் மூலம் இயக்கப்படவுள்ளது.

அத்துடன், சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கான இரு புதிய புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தற்போது ஸ்ரீ தேவி சேவையுடன் யாழ்ப்பாணத்திற்கான புகையிரதங்கள் 7 ஆக உயரும். வடபகுதி மக்களின் பயன்பாட்டினைப் பொறுத்தே நிரந்தர சேவைகளாக இவை அமையவுள்ளதாக தெரியவருகின்றது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *