நல்லூர் ஆலய பகுதியில் சிக்கிய மலையகத்தை சேர்ந்தவர்களுக்கு கிடைத்த தண்டனை

நல்லூர் கந்த சுவாமி ஆலய பகுதியில் யாசகம் பெற்ற ஒன்பது பேருக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தால் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு நேற்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே சந்கேநபர்களுக்கு தலா இருபது ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம், பாத்திரங்கள் உள்ளிட்ட உடைமைகளை மீள வழங்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த 9 பேரும் மலையகத்தின் பதுளை, ஹட்டன் போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில் ஆலய பகுதியில் யாசகம் பெற்ற 9 பேரும் கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *