யாழ் உரும்பிராய் கோர விபத்தில் ஒருவர் பலி!! மேலும் ஒருவர் படுகாயம்

உரும்பிராய் – கோப்பாய் வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள், டிப்பர் வாகனம் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று காலை உரும்பிராய் கிருஸ்ணன் கோவிலடியில் இடம்பெற்றது. சம்பவத்தில் இயக்கச்சியைச் சேர்ந்தவரே உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. மோட்டார் சைக்கிள் (எம்டி90) ஒன்று சடுதியாக வீதியைக் கடந்த நிலையில் பிரதான வீதியில் பயணித்த மற்றொரு மோட்டார் சைக்கிள் (பல்சர்) மோதி நிலைகுலைந்து டிப்பர் வாகனத்துடன் மோதுண்டு விபத்து இடம்பெற்றது ன்று ஆரம்ப விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தையடுத்து பல்சர் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Image may contain: one or more people and outdoorImage may contain: motorcycleImage may contain: one or more peopleImage may contain: one or more people, sky and outdoorImage may contain: one or more people and outdoorImage may contain: shoes and outdoorImage may contain: one or more people and outdoor


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *