அதிகாரம் இல்லையே என்பது கவலையை ஏற்படுத்த வேண்டும் அதுவே தமிழினப் பற்று

வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர் கள் அப்போது அமைச்சராக இருந்த டெனீஸ்வரனைப் பதவி நீக்கியமை ஏற்புடையதல்ல என்றும் மாகாண அமைச்சரைப் பதவி நீக்குகின்ற அதிகாரம் முதலமைச்சருக்குக் கிடை யாது எனவும் கூறியுள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம்;

மாகாண அமைச்சரை நீக்குகின்ற அதிகாரம் ஆளுநருக்கே உண்டென்றும் தீர்ப்பளித் துள்ளது.

இந்தத் தீர்ப்பின் பிரகாரம் மாகாண அமைச் சரை நீக்குகின்ற அதிகாரம்கூட முதலமைச் சருக்கு வழங்கப்படவில்லை என்பது தெட்டத் தெளிவாகிறது.

இலங்கையின் அரசியலமைப்பில் மாகாண சபையின் ஆட்சி முறைமையானது தமிழ் மக் களின் பிரச்சினைக்குத் தீர்வாகக் கொண்டு வரப்பட்டது.

தமிழ் மக்களுக்கு மட்டும் மாகாண ஆட்சி முறைமையை வழங்குவதை விரும்பாத ஆட்சியாளர்கள், நாட்டின் மாகாணப் பிரிப்புக் கேற்றவாறு மாகாண ஆட்சி முறையைக் கொண்டு வந்தனர்.

தமிழ் மக்களுக்காகக் கொண்டு வரப்பட்ட மாகாண ஆட்சியில் எல்லா அதிகாரமும் ஆளு நருக்கே உரியது என்பது இப்போது புலனாகியிருக்கும்.

அதிலும் ஒரு அமைச்சரை நியமிக்கவும் அவரைப் பதவி நீக்கவும் முதலமைச்சரால் முடியாது என்ற உண்மையை மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பு வெளிப்படுத்தியுள்ளது.

இங்கு, அமைச்சர் டெனீஸ்வரனை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பதவி நீக்கி யமை சட்ட ஏற்பாடுகளுக்குப் புறம்பானது என்பதல்ல விடயம்.

மாறாக, ஒரு முதலமைச்சர் தனது ஆட்சியை சிறப்பாக நடத்தும் பொருட்டு அமைச்சர்களைச் சீராக்கும் பணியைக்கூடச் செய்ய முடியாது.

அவ்வாறு ஏதேனும் சீராக்கம் செய்வதாக இருந்தால், ஆளுநரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

ஆளுநர் தான் விரும்பினால் ஒப்புதல் வழங்குவார். இல்லையேல் பொருத்தமற்ற அமைச்சரை வைத்து மாகாண ஆட்சியை நடத்திப்பார்; நான் வேடிக்கை பார்க்கிறேன் என்று ஆளுநர் கூறலாம் என்பதுதான் மாகாண சபை ஆட்சியின் இலட்சனம் என்பது இப்போது புரிகிறது.

நாம் இங்கு கேட்பதெல்லாம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சர் தனது தலைமையின் கீழ் இருக்கக்கூடிய அமைச்சர் ஒருவர் பொருத்தமற்றவர் அல்லது அவர் பதவியினின்றும் விலகியிருப்பது நல்லது எனக் கருதும் பட்சத்தில், அதற்காக ஆளுநரின் அனுமதியைக் கேட்டு நிற்பதை தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு ஏற்றுக் கொள்கிறதா?

அவ்வாறு ஏற்றுக் கொள்ளாவிடில், அமைச் சரை நீக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு உரியது என்பதை வலுப்படுத்தாதது ஏன்?

ஆக, மாகாண சபையினூடு தமிழ் மக்களுக் குக் கிடைக்கக்கூடிய அற்பசொற்ப அதிகாரங் களையும் பலயீனப்படுத்தி, பெரும்பான்மை இனத்திற்குரிய ஆட்சியாளர்களின் கை ஓங்கு வதையே நம் அரசியல் தலைமை விரும்பி நிற்கிறது என்பதைத்தான் மேற்போந்த சம்பவங் கள் சுட்டி நிற்கின்றன என்ற உண்மையை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ளுதல் அவசியம்.

வலம்புரி


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *