யாழ் மக்களை நெருங்கி வந்துள்ள பயங்கர ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை!

இந்த குளவி தேன் கூட்டினை கண்டால் உடனே உங்கள் பிரதேச சபைக்கோ அல்லது தீயணைப்பு சேவைக்கோ உடன் அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உங்கள் வீட்டுக்கு அருகில் இக்குளவி இருந்தால் நிச்சயம் உங்கள் வீட்டு மின்குழிழ் வெளிச்சத்திற்கு இவைகள் வீட்டிள் நுழையும், ஆனால் இரவில் இவைகளால் தாக்க முடியாது.

எனினும் பகல் வேளையில் இதன் தாக்குதல் மூர்க்கத் தனமாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்த குளவிகள் ஒருவரின் தலையை இலக்கு வைத்து தாக்கும் என்பதுடன் , ஒருவரை 8 குளவிகள் தலையில் தாக்கும் ஆயின் அவரின் சிறுநீரகம் செயற்பாட்டை இழப்பதோடு, அவர்களிற்கு எளிதில் மரணம் சம்பவிக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

நீருக்குள் மறைந்தால் கூட நீருக்கு வெளியில் வரும் வரை காத்திருந்து தாக்கும் இந்த குளவி , கிலோமீட்டர் கணக்கில் துரத்தி மூர்க்க தனமாக தாக்கும் வல்லமை கொண்டது என்றும், காற்றினால் கிளைகள் கூட்டினை அசைத்தால் கூட மனிதர்களை துரத்தி தாக்கும் எனவும் கூறப்படுகின்றது.

இதேவேளை கடந்த சில நாட்களின் முன்பு உரும்பிராய் பகுதியில் ஆலய மணி கோபுரத்தில் இருந்த குளவிகள் பல கிலோமீட்டர் தொலைவுக்கு துரத்தி தாக்கியதும், பக்தர் ஒருவர் பரிதாபமாக இறந்தமையும் நினைவில்கொள்ளத்தக்கது.

குறித்த குளவிகளை காணும் பட்சத்தில் (0212 228 888 ) இந்த இலக்கத்தில் தொடர்புகொண்டு தீயணைப்பு சேவைக்கு தகவல்வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *