அந்த ரகசியத்தை வெளியில் சொல்ல மாட்டேன் – தோனி

தற்போது ஐபிஎல் சீசன் தொடர் சூப்பராக நடந்து கொண்டிருக்கிறது. சென்னை கிங்ஸ் அணி சன்ரைஸ் ஐதராபாத்தை வீழ்த்தி தக்க பதிலடி கொடுத்தது. சேப்பாக்கம் ஆடுகளத்தில் நடைபெற்ற இப்போட்டியில் சன்ரைஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 176 ரன்கள் இலக்கை 19. 5 ஒவர்களில் எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெறும் 8வது வெற்றியாகும் . இதனால் 16 புள்ளிகள் பெற்று பிளே ஆப் சுற்றை உறுதிசெய்து மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் கூறியதாவது :

சில போட்டிகளில் சென்னை அணிக்கு தனி நபர்களால் வெற்றி கிடைக்கிறது. ஆனால் பல போட்டிகளில் அணியாக ஜெயிக்கிறோம்.

மேலும் சென்னை அணி தொடர்ந்து விளையாடி பிளே ஆப் சுற்றுக்கு நுழைவது பற்றி பலரும் கேட்கிறார்கள். ஆனால் இதன் ரகசியத்தை நான் யாரிடமும் கூற மாட்டேன். இதை கூறிவிட்டால் என்னை ஏலத்தில் வாங்க மட்டார்கள் என்று தெரிவித்தார்.

சென்னை கின்ஸ் அணிக்கு வரும் 26 ஆம் தேதி மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்கிறது. இப்போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *