தேர்தல் வாக்குக்காக வலைவீச்சு – நாமல் யாழிற்கு விஜயம்!

நாமல் ராஜபக்ச யாழ்ப்பாணத்திற்கு இன்று பயணம் மேற்கொண்டுள்ளார்.

மைத்திரி முகாமிலிருந்த அங்கஜன் இராமநாதன், தற்பொழுது மஹிந்த முகாமிற்கு தாவி, நாமலின் முழுமையான பயண ஏற்பாடுகளை மேற்கொள்கிறார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலை இலக்காக கொண்டு சிறுபான்மையின வாக்குகளின் அவசியத்தை உணர்ந்துள்ள மஹிந்த தரப்பு, நாமலின் மூலம் தமிழ் தரப்புக்களை அணுகுகிறது.

இந்நிலையில் தமிழ் மக்களின் உணர்வுகளை தெரிந்து கொள்ளப் போகிறேன் என்றே சந்திப்பிற்கான தகவல் நாமல் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று நாமல் யாழ் ஆயர், நல்லூர் ஆதின குரு முதல்வர், யாழ் நாகவிகாரை, முஸ்லிம் மக்கள், விளையாட்டு கழகங்கள், யாழ் வணிகர் கழகம் என்பவற்றுடன் சந்திப்பில் ஈடுபட உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கபட்டுள்ளது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *