இலங்கையர்களை வியப்பில் ஆழ்த்திய இராட்சத வண்ணாத்துப்பூச்சி!

இலங்கையில் இராட்சத வண்ணாத்துப்பூச்சி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரியில் எட்லஸ் மோத் என்ற பெயருடைய இராட்சத வண்ணாத்துப்பூச்சி இனங்காணப்பட்டுள்ளது.

இந்த வண்ணாத்துப்பூச்சி 22 சென்றிமீற்றர் நீளத்தை கொண்டுள்ளது. இறகுகளின் உயரம் 10 சென்றி மீற்றராகும்.

வரட்சியான காலப்பகுதிகளில் ஆசிய நாடுகளில் இந்த வகையான வண்ணாத்துப்பூச்சிகள் தென்படுகின்றன.

தற்போது இலங்கையின் சப்ரகமுவ பகுதியில் அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்த வண்ணத்துப்பூச்சியை பார்வையிடுவதற்கு பெருமளவு மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

 

 

 


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *