பாலியல் பொம்மைகள் இனி உங்களின் முகச்சாயலில் வெளியாகலாம்: அம்பலமான அதிர்ச்சி தகவல்

சமூக வலைதளங்களில் இளம்பெண்கள் பகிரும் புகைப்படங்களை சேகரித்து, அதே முகச்சாயலில் பாலியல் பொம்மைகள் வெளியிட நிறுவனங்கள் தயாராவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் செயல்பட்டுவரும் ஒரு பாலியல் பொம்மை நிறுவன ஊழியர் ஒருவர் இந்த அதிரவைக்கும் தகவலை வெளியிட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் தொழிலுக்கு கட்டுப்பாடுகள் மிகுந்த நகரம் பாரிஸ். ஆனால் நகரில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் எக்ஸ் பொம்மைகள் என்ற நிறுவனம் பாலியல் தொழில் கூடமாக உருமாறுவதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெண்களின் முகச்சாயலுடன் வெளியாகும் இந்த பாலியல் பொம்மைகள் சமீப காலமாக பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.

குறித்த பொம்மையுடன் உறவில் ஏற்படும்போது வெளிப்படும் ஒலிகள் பாலியல் பலாத்காரத்தின்போது எழுப்பபடும் ஒலிகளுக்கு ஒத்திருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் சட்டப்பூர்வமாக பாலியல் பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு வருகின்றன. 3 முதல் 9 வயது பிராயம் கொண்ட சிறுமிகளின் வடிவில் பாலியல் பொம்மைகள் சந்தைக்கு வந்துள்ளன.

இணையத்தில் மட்டும் கிடைக்கும் இந்த பொம்மைகள் சமீப காலமாக சிறுமிகளின் வடிவிலும் விற்கப்படுகின்றன.

சிறார்களை பாலியல் துஸ்பிரயோகத்தில் இருந்து காக்கும் பொருட்டு, இந்த பொம்மைகள் பிரித்தானியாவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் அதன் பலன் எதிர்மறையாக அமைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் இயங்கிவரும் ஒரு பாலியல் பொம்மை தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் அதிரவைக்கும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

Jade Stanley என்ற அந்த 35 வயது பெண்மணி வெளியிட்டுள்ள தகவல்கள் தற்போது காட்டுத்தீ போன்று பரவி வருகிறது.

சமூக வலைதளங்களில் இளம்பெண்கள் பகிரும் புகைப்படங்களை சேகரித்து பாலியல் பொம்மைகளை உருவாக்குவதாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

குறித்த புகைப்படங்களை வாடிக்கையாளர்களுக்கு மொடலாக பயன்படுத்துவதாகவும், வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப பாலியல் பொம்மைகளை வடிவமைத்து வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுபோன்ற பாலியல் பொம்மைகளுக்கான வாடிக்கையாளர்கள், தங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் அல்லது அண்டை வீட்டாரின் முகச்சாயலில் பொம்மைகளை கேட்டு வாங்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் உள்ள தொழிற்சாலைகளே உலகமெங்கும் பாலியல் பொம்மைகளை தயாரித்து வழங்குகின்றன.

வாடிக்கையாளர்கள் பொம்மைகளின் முகச்சாயல் முதல் உடல் உறுப்புகளின் அளவுகள் வரை தெரிவு செய்யலாம். மட்டுமின்றி அவர்கள் அனுப்பும் புகைப்படம் போன்று அதே முகச்சாயலில் பொம்மைகள் வடிவமைத்து வழங்கப்படுவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *