போதையற்ற பாதை- வடமராட்சியில் விழிப்புணர்வு ஊர்வலம்

வடமராட்சியில் போதையற்ற பாதை எனும் தொனிப்பொருளில் இன்று விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந் நிகழ்வை பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை, வடமராட்சி வடக்கு வலயக் கல்வி பணிமனை, வடமராட்சி வடக்கு பிரதேச செலகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

 

பருத்தித்துறை பிரதேச செயலகம் முன்பாக ஆரம்பமான இந்த ஊர்வலம், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வரை சென்று அங்கு விழிப்புணர்வு கூட்டம் இடம் பெற்றது

இந் நிகழ்வில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையினர், நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், பருத்தித்துறை பிரதேச செயலர் ஏ.சிறி, பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் அ.ச.அரியகுமார் மற்றும் வடமராட்சி கல்வி உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *