வித்யாசமான முறையில் பிறந்தநாளை கொண்டாடிய ஹாரிஷ் கல்யாண் – குவியும் பாராட்டுக்கள்!

இளம் பெண்ககளின் மனதை வென்ற ஹாரிஸ் கல்யாண் அமலா பால் ஹீரோயினாக அறிமுகமான ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர். அதன்பிறகு சில படங்களில் நடித்துள்ள ஹரிஷ், கடந்த 2017ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அவருக்கு மிகப்பெரிய அடையாளம் கிடைத்தது.
‘பிக் பாஸ்’ முடிந்தபிறகு, அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாடல் அழகியான  ரைஸா வில்சனுடன் சேர்ந்து ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படத்தில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சயமான நடிகராக வலம் வருகிறார்.
இந்நிலையில் இன்று தனது 29வது பிறந்தநாளை கொண்டாடிய அவர் சமூக விழிப்புணர்வு மற்றும் “கோ க்ரீன்” என்ற கருத்தோடு பள்ளிகளில் மரக்கன்றுகள் நட்டு தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார். அப்போது பேசிய அவர், சமூக விழுப்புணர்வை எடுத்துரைக்கும் விதத்தில் எனது பிறந்த நாளை கொண்டாடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இப்போது தான் எனது பிறந்தநாள் முழுமையடைந்தது. மேலும் இதை விட அதிகமான நடவடிக்கைகளை எனது அடுத்த பிறந்தநாளில் நிகழ்த்துவேன் என்று நெகிழ்ச்சியோடு கூறினார்

அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *