யாழ்.திருநெல்வேலி – ஆடியபாதம் வீதியில் ஒரு பகுதி ஒருவழி பாதையாக மாற்றம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு யாழ்.திருநெல்வேலி சந்தைக்கு முன்பாகவுள்ள ஆடியபாதம் வீதியில் போக்குவரத்து நொிசலை தவிர்ப்பதற்காக வீதியின் ஒருபகுதியில் ஒருவழி பயணத்திற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

13.01.2022ம் திகதி காலை 5 மணி தொடக்கம் இரவு 8 மணிவரை ஆடியபாதம் வீதியில் அரசடி அம்மன் கோவில் சந்தியில் இருந்து திருநெல்வேலி சந்தி நோக்கிய பயணம் அம்மன் வீதி மற்றும் கலாசாலை வீதிக்கு திசைதிருப்பப்பட்டு திருநெல்வேலி சந்தியில் இருந்து கல்வியங்காட்டுச் சந்தி நோக்கிய பயணத்திற்கு மட்டும் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளதாக நல்லுார் பிரதேசசபை தலைவர் ப.மயூரன் கூறியிருக்கின்றார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *