வாகனங்களைப் போல் விமானத்தைச் செல்வதைப் பார்த்துள்ளீர்களா? (காணொளி)

நமது கார் பழுதடைந்தால், அதைத் தள்ளி ஸ்டார்ட் செய்வதைப்போல, விமானம் ஒன்றினை பலர் தள்ளிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் இந்த சம்பவம் நேபாளத்தில் உள்ள விமான நிலையத்தில் இடம்பெற்ர்றதாக கூறப்படுகின்றது.

நேபாளத்தின் பஜுரா விமான நிலையத்தில் (Bajura Airport) கடந்த புதன்கிழமை தாரா ஏர் நிறுவனத்தின் (Tara Air plane) விமானம் ஒன்றை பலர் தள்ளுகின்றனர்.

இது தொடர்பாக நேபாள ஊடகங்கள் கூறுகையில், பாஜுரா விமான நிலையத்தில் (Bajura Airport) தரையிறங்கும் போது விமானத்தின் பின்புற டயர் வெடித்தது. இதனால் விமான நிலைய ஓடுபாதையில் இருந்து விமானத்தால் நகர முடியவில்லை.

விமான ஓடுபாதையை இந்த விமானம் ஆக்ரமித்துக் கொண்டதால், அடுத்து வந்த விமானத்தை ஓடுபாதையில் தரையிறக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்த பாதுகாப்புப் பணியாளர்கள், விமானத்தை, காரைப் போல தள்ளும் முயற்சியில் ஈடுபட்டதைப் பார்த்த பயணிகளும் அவர்களுடன் சேர்ந்து விமானத்தைத் தள்ள முயற்சித்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் நேபாளத்தைச் சேர்ந்த தாரா ஏர் விமான நிறுவனம், எட்டி ஏர்லைன்ஸின் சகோதர நிறுவனம் (subsidiary of Yeti Airline) ஆகும். இந்த சம்பவம் குறித்து எட்டி ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,

தாரா ஏரின் 9N-AVE விமானம் பாஜுரா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது, டயர் வெடித்தது. அப்போது மற்றொரு விமானம் தரையிறங்க தயாராகி கொண்டிருந்தது. எனினும் ஓடுபாதையில் இடம் இல்லாததால் தரையிறங்க முடியவில்லை.

எனவே, விமானத்தை அங்கிருந்து நகர்த்திச் செல்வதற்குத் தேவையான வாகனங்கள் எதுவும் விமானநிலையத்தில் இல்லை. இதன்காரணமாக விமான நிலைய அதிகாரிகளும் பயணிகளும் விமானத்தை நகர்த்த உதவினார்கள் என அவர் கூறியுள்ளார்.

குறித்த இந்த வீடியோவைப் பகிர்ந்த நபர், “இது நேபாளத்தில் மட்டுமே நடக்கும்” என்று எழுதினார். இந்நிலையில் வைரலாகும் குறித்த வீடியோவை பார்த்து பலரும் வேடிக்கையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *