காணி உரிமையாளர்களுடன் ஆளுநர் பேச்சு! ஆவணங்களை பெற்றுக் கொடுக்க பிரதேச செயலர்களுக்கு பணிப்பு!!

யாழ்.மாதகலில் கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிக்க முயற்சிக்கப்படும் காணி உரிமையாளர்களை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். காணி உரிமையாளர் மற்றும் உத்தியோகத்தர்களை தனித்தனியாக கலந்துரையாடிய வடக்கு மாகாண ஆளுநர் காணி உரிமம் தொடர்பில் கேட்டறிந்தார்.

சிலருடைய காணிகளுக்கான சட்டரீதியான உரிமங்கள் இல்லாமை ஆளுநரால் அவதானிக்கப்பட்ட நிலையில் குறித்த விடயம் தொடர்பில் சங்கானை மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலாளர்களை நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல் வழங்கினார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *