கட்டுப்பாட்டையிழந்த கன்டர் வாகனம் விபத்து! கிளிநொச்சியில் மீண்டும் கோரம்!!

கிளிநொச்சி டிப்போ சந்தியில் நேற்று பகல் இடத்பெற்ற விபத்து சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பரந்தன் திசையிலிருந்து கிளிநொச்சி நகருக்குள் நுழைந்த கன்டர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதன்போது, பேருந்து நிலையத்தில் தரித்திருந்த முச்சக்கரவண்டி மற்றும் காருடன் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்விபத்தில் சிக்குண்ட இருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டள்ளனர்.

இவ்விபத்தை ஏற்படுத்திய கன்டர் வாகனம் பகுதியளவில் சேதமடைந்ததுடன், முச்சக்கரவண்டி மற்றும் கார் ஆகியனவும் பாரிய சேதமடைந்துள்ளன.

கிளிநொச்சி பொலிசார் இவ்விபத்துத் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை கடந்த 15ஆம் திகதி விபத்து இடம்பெற்ற பகுதியை அண்மித்துள்ள கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் முன்பாக பாதசாரி கடவையில் இவ்வாறானதொரு விபத்தின்போது பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்திருந்ததுடன், மற்றுமொரு மாணவி படுகாயமடைந்திருந்தார்.

அண்மைய நாட்களில் கிளிநொச்சி நகரில் இவ்வாறான விபத்துக்கள் அதிகரித்த வேகம் மற்றும் நெரிசல் காரணமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *