யாழ். மண்ணின் சாதனை வீராங்கனைக்கு நேர்ந்த சோகம்!

யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரியின் சாதனை வீராங்கனை திருமதி. காவேரி பிரதீபன் இறைவனடி சேர்ந்தார்.

மரத்தன், குறுந்தூர மற்றும் நெடுந்தூர ஓட்டங்கள், 100, 400 M தொடர் ஓட்டங்கள், கோல் ஊன்றி பாய்தல், Hockey, Volleybal, Netball, Elle என பல விளையாட்டு போட்டிகளில் பங்குபெற்றுள்ளார். இவர் தேசிய மட்டங்களிலும் மாகாண, மாவட்ட மட்டங்களிலும் பல பதக்கங்களை வென்றுள்ளார்.

29 வயதான திருமதி காவேரி பிரதீபன் (Kaveri Pradeepan) யாழ். அளவெட்டியை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி, உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்டவர்.
இவர் கடந்த 3 வருடங்களாக Aplastic Anaemia என்ற இரத்த சோகை நோயினால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

Myclodis Plastic Anaemia வாக முற்றிப் போன குறித்த நோயினால் சிகிச்சை பயனின்றி நேற்று (15.11.2021) காலை 10 மணியளவில் மரணமடைந்துள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *