யாழ்ப்பாணம் வந்தவுடன் முப்படை தளதிபதிகள், பொலிஸாருடன் ஆளுநர் உயர்மட்ட பேச்சு..!

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வடக்கின் பாதுபாப்பு நிலவரம் தொடர்பாக முப்படையினர் மற்றும் பொலிஸார், விசேட அதிரடிப்படையினருடன் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியிருக்கின்றார்.

யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு இன்று காலை சென்றிருந்த ஆளுநர் அங்கு பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார். வடமாகாணத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலவரங்கள்

மற்றும் செய்யப்படவேண்டிய விடயங்கள் தொடர்பில் நீண்ட நேரம் ஆராயப்பட்டது. இதன்போது வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஜகத் பளிகக்கார, யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் பிரியந்த லியனகே,

யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள், கடற்படை, விமானப் படை, இராணுவ அதிகாரிகளிடன் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *