நீண்ட நாட்களின் பின்னர் மீள திறக்கப்படுகிறது பாடசாலைகள்..!

வடமாகாணத்தில் 200ற்கும் குறைவான மாணவர்களை கொண்ட சுமார் 639 பாடசாலைகள் இன்றைய தினம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.

கொரோனா பரவல் அபாயம் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளில் தரம் 1- 5 வரையான 200ற்கும் குறைவான மாணவர்களைக் கொண்டிருக்கும்

பாடசாலைகளே இவ்வாறு ஆரம்பிக்கப்படுகிறது.யாழ்.மாவட்டம் 299 பாடசாலைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 52 பாடசாலைகளும்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் 81 பாடசாலைகளும் வவுனியா மாவட்டத்தில் 124 பாடசாலைகளும்

மற்றும் மன்னார் மாவட்டத்தில் 83 பாடசாலைகள் இவ்வாறு சுகாதார வழிகாட்டலைப் பின்பற்றி ஆரம்பிக்கப்படுகிறது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *