பாடசாலை மாணவனை அச்சுறுத்தி பணம், நகைகள் கொள்ளை!!

போலி முகநூல் கணக்கு ஒன்றை ஆரம்பித்து பெற்றோரை கொல்வேன் என 17 வயதான பாடசாலை மாணவனை அச்சுறுத்தி நகை மற்றும் பணம் கப்பமாக பெற்றவர் யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு பயந்த மாணவன்‌ குறித்த சந்‌தேகநபர்‌ கேட்ட பணத்தையும்‌ நகையையும்‌ அவர்‌ சொன்ன இடத்துக்குக்‌ கொண்டு சென்று வைத்துள்ளார். மாணவன் அந்த இடத்திலிருந்து சென்றபின்‌னர் சந்தேகநபர்‌ நகை, பணம்‌ என்பவற்றை எடுத்துச்சென்றார்‌.

இது தொடர்ந்து சிலநாட்கள்‌ நடைபெற்‌றுக்கொண்டிருந்த நிலையில்‌ நகைகளையும்‌ பணத்தையும்‌ தேடிய பெற்‌றோர்‌ அவற்றைக்‌ காணாது மகனிடம்‌ வினவினர்‌. உண்மையைமறைக்க முடியாத மாணவன்‌, நடந்தவற்றை பெற்றோரிடம்‌ கூறியுள்ளார்.

இதனையடுத்து பெற்றோர்‌ வட்டுக்‌கோட்டை பொலிஸ்‌ நிலையத்தில்‌ முறைப்பாடு பதிவு செய்தனர்‌. முறைப்‌பாட்டின்‌ அடிப்படையில்‌ விசாரணைகளை மேற்கொண்ட வட்டுக்கோட்டை பொலிஸார்‌ சந்தேகநபரை இன்று கைது செய்தனர்‌.

சந்தேகநபரிடம்‌ மேற்கொண்ட விசாரணையின்‌ அடிப்படையில்‌ 3 மோதிரங்‌கள்‌, 3 சங்கிலிகள்‌, 3 காப்புகள், ஒரு சோடி தோடு மற்றும்‌ 2 இலட்சத்து பத்தாயிரம்‌ ரூபா பணம் ஆகியவற்றை சந்தேகநபர்‌ கப்பமாக வாங்கியதை ஏற்றுக்‌கொண்டார்‌.

இந்தநிலையில்‌, குறித்த சந்தேகநபர்‌ வேறு மோசடிகளிலும்‌ ஈடுபட்டாரா என்ற கோணத்தில்‌ பொலிஸார்‌ விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்‌.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *