வவுனியாவில் 15 வயது சிறுவனின் உயிரை பறித்த டிப்பர் வாகனம்!

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் பகுதியில் டிப்பர் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் 15 வயது சிறுவன் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் 15 வயது சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் வவுனியா செட்டிகுளம், முதலியார்குளம் பகுதியில் இன்று திங்கட்கிழமை (18) மாலை இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்து சம்பவத்தில் செட்டிகுளம், முகத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஆ.சயந்தன் (வயது 15) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

மதவாச்சி – மன்னார் பிரதான வீதியில் பயணித்த டிப்பர் வாகனம் செட்டிகுளம், முதலியார்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் படுகாயமடைந்து 15 வயது சிறுவன் மரணமடைந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய டிப்பர் சாரதி செட்டிகுளம் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *