யாழ்.கொடிகாமத்தில் பாடசாலை தகரங்களை திருடிய நபர் கைது..!

யாழ்.கொடிகாமம் – நாவலடி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தகரம் திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

பாடசாலையில் வாகனங்களை நிறுத்துவதற்காக அமைக்கப்பட்ட கொட்டகை தகரத்தை திருடியதாக வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை நடத்திய பொலிஸார் கடந்த சனிக்கிழமை குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

மேலும் திருடப்பட்ட தகரங்கள் ஒவ்வொன்றும் 24 ஆயிரம் பெறுமதியானவை என கூறப்படுவதுடன், சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *