யாழ்.மானிப்பாய் – காரைநகர் வீதி புனரமைப்பு பணிகள் இழுபறியில்! மக்கள் சீற்றம்

மிக நீண்டகாலமாக புனரமைக்கப்படாமலிருக்கும் மானிப்பாய் – காரைநகர் வீதியின் புனரமைப்பு பணிகளில் சங்கானை, சண்டிலிப்பாய் பிரதேச செயலகங்கள் அசமந்தமாக இருப்பதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வீதி அகலிப்பு பணிகளுக்கான சம்மத கடிதங்களை பொதுமக்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பாகவே வழங்கிவிட்ட நிலையில் இதுவரையில் அந்த சம்மத கடிதங்களை வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் பிரதேச செயலகங்கள் சமர்ப்பிக்கவில்லை.

இது குறித்து வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வீதி திட்ட பொறியியலாளர் குணநேசன் கூறுகையில், பொதுமக்களின் சம்மத கடிதங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் ஒரு சில வாரங்களில் பணிகள் தொடங்கப்படும்.

மேலும் குறித்த வீதியில் சுமார் நுாற்றுக்கணக்கான பாலங்கள், மதகுகள், கால்வாய்கள் காணப்படுகின்றன. அவற்றை புனரமைப்பு செய்யும் பணிகளை நிறைவு செய்து காப்பெற் போடும் பணிகளை ஆரம்பிக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை மானிப்பாய் – காரைநகர் வீதி புனரமைப்பு பணிகளை நோில் பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மிக பழமையான வாய்க்கால்கள், மதகுகள் சில அடைக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியதுடன் அவை சீர் செய்யப்பட்டே வீதி புனரமைப்பு செய்யப்படவேண்டும் என சுட்டிக்காட்டினார்.

அவ்வாறு இடம்பெறாவிட்டால் விடயத்தை நெடுஞ்சாலைகள் அமைச்சின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *