யாழ்.பருத்தித்துறையில் வீட்டு பூசைக்கு படைத்த உணவை சாப்பிட்ட முதாட்டி மயங்கி விழுந்து மரணம்..!

யாழ்.பருத்தித்துறை – கரணவாயில் வீட்டுப் பூசை வழிபாட்டின் பின்னர் சுவாமிக்கு படையலிடப்பட்ட அவல், கடலையை உட்கொண்ட மூதாட்டி மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை இரவு கரணவாய் – அந்திரன் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் ஆறுமுகம் யோகம்மா (வயது – 82) என்பவரே உயிரிழந்தார்.

நவராத்திரி விழா வீட்டுப் பூசை தினமான நேற்று முன்தினம் வீட்டில் நடைபெற்ற வழிபாட்டின் பின்னர் சுவாமிக்கு படையிலிடப்பட்ட அவல், கடலை என்பவற்றை உண்டபோதே குறித்த மூதாட்டி மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *