யாழ்.போதனா வைத்தியசாலையில் கர்ப்பவதிகளுக்கு தடுப்பூசி அட்டை கட்டாயமா?

யாழ்.போதனா வைத்தியசாலையில் தடுப்பூசி பெறாத கர்ப்பவதி பெண்களுக்கும் சாதாரண நிலைமையில் வழங்கப்பட்டதை போன்று சிகிச்சை வழங்கப்படுவதாக பணிப்பாளர், வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக மற்றும் பிரசவத்திற்காக கர்ப்பவதிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். அதில் தடுப்பூசி பெற்றவர்கள் பெறாதவர்கள் என்ற பேதம் எதுவும் காட்டப்படவில்லை.

சாதாரண நிலைமையில் வழங்கப்பட்டதை போன்று சிகிச்சை வழங்கப்படுகின்றது. தடுப்பூசி பெறாதவர்கள் எதேனும் காரணங்களுக்காக தடுப்பூசி பெறாது விட்டிருக்கலாம் எனவும் கூறியிருக்கின்றார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *