பெற்ற மகளின் வாயில் சூடு வைத்த தாய்!

கிளிநொச்சி – அக்கரையான் பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட விநாயகர் குடியிருப்பு பகுதியில் 08.10.2021 அன்று சிறுமிக்கு நெருப்பால் சூடு வைத்த தாய் தொடர்பில் பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப் பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

தாயார் சமைத்து வைத்த உணவின் அப்பளத்தை 5 வயது சிறுமி தாயாருக்கு தெரியாமல் எடுத்து சாப்பிட்ட காரணத்தினால் தாயார் பெற்ற குழந்தைக்கு வாய் பகுதியில் நெருப்பால் சூடு வைத்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

சம்பவத்தை அவதானித்த சிறுமியின் வீட்டில் இருந்த பெரியவர் அக்கரையான் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார், குறித்த தகவலிற்கமைய தாயார் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 09.10.2021 இன்றைய தினம் சிறுமி கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அக்கரையான் பொலிசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ள இதேவேளை இன்றைய தினம் குறித்த சிறுமியின் தாயார் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சிறுமியின் தந்தை தொழிலுக்குச் சென்ற சமையம் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது என மேலும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுமிக்கு நடந்த பதை பதைக்கும் சம்பவம் அப் பகுதியில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

சிறுவர்கள் தமது குறும்பு தனத்தை வெளிப்படுத்துவது என்பது இயற்கையே. இதனால் சில தவறுகளை கூட அவர்கள் செய்யவும் கூடும். எனினும் இதற்காக சிறு குழந்தைகளை மோசமான முறையில் தண்டிப்பதானது மிகவும் தவறான செயல் என்பதுடன், இது குறித்த குழந்தைகளின் மனநிலையையும், உடல்நிலையையும் மோசமாக்கும் என்பதுடன் அவர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் எனவும் சமூக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *