யாழ்ப்பாணத் தமிழ் பெண் நோர்வே நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் நோர்வேயின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஹம்சாயினி குணரத்தினம் என்பவரே இவ்வாறு நாடாளுமன்றிற்கு தெரிவாகியுள்ளார். மூன்று வயதில் ஹம்சாயினி குணரத்தினம் நோர்வேக்கு புலம்பெயர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21ம் திகதி ஹம்சாயினி குணரத்தினம் ஒஸ்லோவின் பிரதி மேயராக நியமிக்கப்பட்டிருந்தார். 2019ம் ஆண்டில் மீளவும் அந்தப் பதவிக்கு தெரிவாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஹம்சாயினி குணரத்தினம் வெற்றியீட்டியுள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *