முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு குருதி சுத்திகரிப்பு இயந்திரம் அன்பளிப்பு

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு 16 இலட்சம் ரூபா பெறுமதியான குருதி சுத்திகரிப்பு இயந்திரமொன்று கடந்த 11ஆம் திகதி அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

முகத்துவாரம் – மட்டக்குளிய லயன்ஸ் கழகத்தினரின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் இதற்கான நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

கனடாவில் வசிக்கும் மருத்துவர் ஒருவரின் நிதிப்பங்களிப்பில் இந்த குருதி சுத்திகரிப்பு இயந்திரம் மாவட்ட மருத்துவமனை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதில் லயன்ஸ் கழகத்தின் இரண்டாம் மாவட்ட பிரதி ஆளுனர் சாவித்ரி, மாவட்ட பிரதி குழு கணக்காளர் சேகர் மற்றும் மட்டக்குளிய லயன்ஸ் கழகத்தின் உறுப்பினர்கள், மாவட்ட வைத்தியர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *