விடுதலைப்புலிகளை அழித்தது போன்று ஜனாதிபதி இதனையும் அழிக்கவேண்டும்; ஞானசார தேரர்

நாட்டில் விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு செயற்பட்டது போன்று செயற்பட்டு ஜனாதிபதி இஸ்லாமிய தீவிரவாதத்தையும் அழிக்கவேண்டும் என பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் கூறியுள்ளார்.

ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இஸ்லாமிய தீவிரவாதம் மீண்டும் தலைதூக்குவதை தடுப்பதற்கான அவசியம் உள்ளதாக குறிப்பிட்ட தேரர், இஸ்லாமிய தீவிரவாதத்தை அழிக்க துல்லியமான விரைவான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவேண்டும் எனவும்கூறியுள்ளார்.

தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்துவதற்கான சதிமுயற்சிகள் மற்றும் தீவிரவாதிகளின் செல்வாக்கு குறித்தும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ள தேரர், நாட்டில் தீவிரவாத கொள்கைகளை பரப்புபவர்களை அடையாளம் காண்பது அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் இஸ்லாமிய மதத்தின் பெயரால் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட உயிர்த்தஞாயிறு தாக்குதல் தற்போது அரசியல் பந்தாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச அரசியல் தற்போது இதற்குள் ஊடுறுவுகின்றதாகவும், இந்த தாக்குதலிற்கு வழிவகுத்த கொலைகார போதனைகள் கோட்பாடுகள் குறித்து எந்த விசாரணையும் இடம்பெறவில்லை என தோன்றுகின்றதாகவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயிர்த்தஞாயிறு தாக்குதலை நாட்டில் ஸ்திரமின்மையை ஏற்படுத்துவதற்காக மதத்தலைவர்கள் உட்பட சில சக்திகளை இதற்காக பயன்படுத்துகின்றதாகவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *