கலப்பு தேர்தல் முறை ஈ.பி.டி.பி. உள்ளிட்ட கட்சிகள் பரிந்துரை

தொகுதிவாரி முறை மற்றும் விகிதாசார பிரதிநிதித்துவ அமைப்பு ஆகிய இரண்டின் அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு கலப்பு தேர்தல் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என மகஜன எக்ஸத் பெரமுன தெரிவித்துள்ளது.

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறையின் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காணவும், தேவையான திருத்தங்களை பரிந்துரைக்கவும் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் குறித்த கட்சி பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

இதன்போது,சபையில் உறுப்பினர்கள் 225 பேரில் 140 பேர் தொகுதிவாரி முறை மூலமும், 70 பேர் மாவட்ட வாரியாக விகிதாசார முறையின் மூலமும் அதே நேரத்தில் தேசிய பட்டியலுக்கு 15 இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

65 சதவிகித உறுப்பினர்கள் தொகுதிவாரி முறையிலிருந்தும், மீதமுள்ள 35 சதவிகிதம் விகிதாசார பிரதிநிதித்துவத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் மும்மொழிந்துள்ளனர்.

கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்ற குறித்த கூட்டத்தில் தேச விமுக்தி ஜனதா கட்சியும் தங்களது முன்மொழிவுகளை இதன்போது சமர்பித்திருந்தனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *