யாழில் வீட்டிலேயே உயிரிழந்த நால்வருக்கு கோவிட் தொற்று உறுதி

யாழ்ப்பாண மாவட்டத்தில் மேலும் ஐவர் கோவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சங்கானையைச் சேர்ந்த 74 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வரணியில் 98 வயதுடைய பெண் ஒருவர் வீட்டிலேயே உயிழந்துள்ளார். அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கோவிட் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை சுகாதார சுகாதார அதிகாரி பிரிவைச் சேர்ந்த கட்டுவனையைச் சேர்ந்த 81 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கோவிட் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 100 வயதுடைய ஆண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலம் மந்திகை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கோவிட் தொற்றுள்ளமை கண்டறிப்பட்டுள்ளது.

அல்வாய் மேற்கு திக்கத்தைச் சேர்ந்த 47 வயதுடைய பெண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் மந்திகை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கோவிட் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 248ஆக உயர்வடைந்துள்ளது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *