என்னை நிம்மதியா இருக்க விட மாட்டீங்களா?

சினிமாவில் எப்பொழுது நடிக்கபோகிறீர்கள் என ரசிகர் கேட்ட கேள்விக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதிலளித்துள்ளார்.

´ரோஜா´ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ரஹ்மான் தனது தேர்ந்த இசையின் மூலம் மொழிகள் கடந்து உலக அளவில் பிரபலமானார். இவர் இசையமைத்த ஆங்கிலப் படமான ´ஸ்லம்டாக் மில்லியனர்´ படத்துக்கு மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன. அதுவும், ஒன்றல்ல, இரண்டு ஆஸ்கர் விருதுகள்.

திரையுலகில் ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகமாகி கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் ஆகிறது. ரஹ்மானின் இசை மீதான எதிர்பார்ப்பு இப்பொழுது துளியும் குறையவில்லை. ஒரு பாடலுக்கு பின்னும் அவரது அபரீதமான உழைப்பு இருக்கிறது. பாடல்கள் வெளியாகும் கடைசி நிமிடம் வரை, அந்தப் பாடல்களை மேம்படுத்த உழைத்துக்கொண்டிருப்பார்.

இந்த நிலையில் அவர் ´மிமி´ என்ற ஹிந்திப் படத்துக்கு இசையமைத்திருந்தார். இந்தப் படம் நெட்ஃபிளிக்ஸில் கடந்த மாதம் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் இந்தப் படத்தில் ரஹ்மான் ´ரிஹாயி தே´ என்ற பாடலை பாடியிருந்தார்.

இந்தப் பாடலின் முன்னோட்ட விடியோவில் ரஹ்மானும் இடம்பெற்றிருந்தார். அதற்கு ரசிகர் ஒருவர், ´நீங்கள் எப்பொழுது நடிக்கப்போகிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ரஹ்மான், என்னை நிம்மதியா இருக்க விட மாட்டீர்களா? என நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *