இலங்கையில் பாதுகாப்பு சின்னமாக மாற்றப்படும் தமிழரின் பழம்பெரும் பொக்கிஷங்கள்

காலி – உனவட்டுன பிள்ளையார் ஆலயத்தில் உள்ள 300 வருட பழைமை வாய்ந்த தேர் மற்றும் கோவில் ஆகியன பாதுகாப்பு சின்னங்களாக அறிவிக்கப்படவுள்ளன.

இது தொடர்பில் வர்த்தமானியில் அறிவிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

இது குறித்து ஆராய்ந்து பார்க்குமாறு தொல்பொருள் பணிப்பாளர் நாயகத்திற்கு இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

தென்னிந்திய சிற்பக்கலை நிபுணர்களால் இந்த தேர் சந்தன மரம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில் 1983ம் ஆண்டு இனக்கலவரத்தின் போது விஷமிகள் இந்த தேரை எரித்து நாசமாக்க முயற்சித்தனர்.

இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க உள்ளிட்ட அமைச்சின் முக்கியஸ்தர்கள் இந்த ஆலயத்திற்குச் சென்று மேற்பார்வை செய்துள்ளனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *