நடிகர் சிம்புவின் தற்போதைய நிலை!

கௌதம் மேனனின் ´வெந்து தணிந்தது காடு´ படத்தில் இருந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக புதிய போட்டோ வெளியாகியுள்ளது.

இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ´வெந்து தணிந்தது காடு´ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு எழுத்தாளர் ஜெயமோகன் கதை எழுதியுள்ளார். நடிகை ராதிகா சரத்குமார் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரேற்பை பெற்றது.

இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக நடிகர் சிம்புவின் தோற்றத்தை வெளிப்படுத்தும் விதமாக புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் தனது கதாப்பாத்திரத்திற்காக மிகவும் ஒல்லியாக மாறியிருக்கிறார் நடிகர் சிம்பு. அவரது உழைப்பை பார்த்த ரசிகர்களுக்கு சிம்புவின் மேலானமதிப்பு ஒரு படி உயர்ந்திருக்கிறது என்றே சொல்லலாம்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *