ஈழத்தின் வரலாற்று சிறப்புமிக்க வரதராஜப் பெருமாள் ஆலய மகோற்சவம் இடைநிறுத்தம்

ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த ஆவணி மகோற்சவத்தை இம்முறை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என ஆலய பரிபாலன சபை அறிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் பெருந்தொற்றைக் கருத்தில்கொண்டு சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க மகோற்சவம் நிறுத்தப்பட்டுள்ளது எனப் பரிபாலன சபை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டுக்கான ஆவணி மகோற்சவம் நாளை சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவிருந்தமை குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *