யாழ்ப்பாணத்திற்கு புதிய இந்திய துணைத்தூதுவர் நியமனம்

யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத்தூதராக இந்திய வெளியுறவு அமைச்சினால் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதராக இருந்த பாலச்சந்திரன், சுரினாம் குடியரசு நாட்டுக்கும் அதனோடு இணைந்து மூன்று நாடுகளுக்குமான இந்தியத் தூதுவராக பொறுப்பேற்கவுள்ளார்.

இந்த நிலையில், யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத்தூதராக ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர், கண்டியிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில் பணியாற்றிவரும் நிலையில் விரைவில் யாழ்ப்பாணத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக கூறப்படுகின்றது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *