மெய்ப்பாதுகாவலரின் கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்திய நீதிபதி இளஞ்செழியன்!

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது கொல்லப்பட்ட தனது மெய்ப்பாதுகாவலரின் கல்லறைக்குச் சென்ற நீதிபதி இளஞ்செழியன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

நீதிபதி எம்.இளஞ்செழியன் மற்றும் அவரது பாதுகாவலர்களை இலக்கு வைத்து நல்லூரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அவரது, மெய்ப்பாதுகாவலர் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் 2017ம் ஆண்டு ஜூலை 22ம் திகதி இடம்பெற்றிருந்தது. இதில் பொலிஸ் சார்ஜன்ட் சரத் ஹேமசந்திர என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இந்நிலையில், தனது மெய்பாதுகாவலர் உயிரிழந்து நான்கு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட் சரத் ஹேமசந்திரவின் கல்லறைக்குச் சென்று நீதிபதி இளஞ்செழியன் நேற்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அத்துடன், பொலிஸ் சார்ஜன்ட் சரத் ஹேமசந்திரவின் குடும்ப உறுப்பினர்களையும் நீதிபதி இளஞ்செழியன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *